பிரதமர் அலுவலகம்

இந்திய ஹாக்கி அணியின் ஒவ்வொரு வீரருக்கும் பிரதமர் பாராட்டு


ஹாக்கி மற்றும் விளையாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் 2021 ஆகஸ்ட் 5 மிகவும் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக இருக்கும்: பிரதமர்

ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும், மனதிலும் ஹாக்கிக்கு சிறப்பான இடம் உண்டு

Posted On: 05 AUG 2021 8:03PM by PIB Chennai

இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும், மனதிலும் ஹாக்கிக்கு சிறப்பான இடம் உண்டு என்று பிரதமர் கூறியுள்ளார். ஹாக்கி மற்றும் விளையாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் 2021 ஆகஸ்ட் 5 மிகவும் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், இந்திய ஹாக்கி அணியின் ஒவ்வொரு வீரருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவின் சிறப்பான வெற்றி குறித்து பிரதமர் உடனடியாக பதிவிட்டிருந்தார்.

பின்னர், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்ட பயனாளிகளுடன் உரையாடிய போது, இந்திய ஹாக்கி அணியின் வெற்றி குறித்து மீண்டும் ஒரு முறை பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

-----



(Release ID: 1742946) Visitor Counter : 308