பிரதமர் அலுவலகம்
டோக்கியோ ஒலிம்பிக் 2020: குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா பார்கோஹைனுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
04 AUG 2021 12:04PM by PIB Chennai
டோக்கியோ ஒலிம்பிக் 2020-இல், குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா பார்கோஹைனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது விடா முயற்சியும், உறுதித்தன்மையும் போற்றுதலுக்குரியவை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
“லவ்லினா பார்கோஹைன், மிகச்சிறப்பாக சண்டையிட்டார். குத்துச்சண்டை அரங்கில் அவர் பெற்ற வெற்றி, ஏராளமான இந்தியர்களுக்கு எழுச்சியூட்டுகிறது. அவரது விடாமுயற்சியும், உறுதித்தன்மையும் போற்றுதலுக்குரியவை. வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது வருங்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
***
(रिलीज़ आईडी: 1742249)
आगंतुक पटल : 351
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam