பிரதமர் அலுவலகம்

சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் ஜூலை 31 அன்று இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) பயிற்சி அதிகாரிகளிடம் பிரதமர் உரையாடுகிறார்

प्रविष्टि तिथि: 30 JUL 2021 10:06PM by PIB Chennai

சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் ஜூலை 31, 2021 அன்று காலை 11 மணிக்கு இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) பயிற்சி அதிகாரிகளிடம் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடவிருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மற்றும் இணை அமைச்சர் திரு நித்தியானந்த் ராய் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமி பற்றி:

சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமி, நாட்டின் முதன்மை காவல் பயிற்சி நிறுவனமாகும். இந்திய காவல் பணி  அதிகாரிகளுக்கு துவக்க நிலையில் இந்த நிறுவனம் பயிற்சி அளிப்பதுடன், பணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி நேரத்திற்கு இடையே பல்வேறு வகுப்புகளையும் நடத்துகிறது.

 *****************


(रिलीज़ आईडी: 1741041) आगंतुक पटल : 238
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada