பிரதமர் அலுவலகம்

தமது மாதாந்திர ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் உரையில் சண்டிகரை அடிப்படையாகக் கொண்ட உணவகத்தின் உரிமையாளருக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 25 JUL 2021 4:13PM by PIB Chennai

வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றும்மனதின் குரல்' நிகழ்ச்சியில், கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு ஊக்குவிக்கும் தன்னார்வ முயற்சியில் ஈடுபட்டு வரும் சண்டிகரை அடிப்படையாகக் கொண்ட உணவகத்தின் உரிமையாளருக்கு இன்று பிரதமர்  பாராட்டு தெரிவித்தார்.

தமது மகள் மற்றும் மருமகளின் யோசனையின்படி, திரு சஞ்சய் ரானா என்ற அந்த  உணவக உரிமையாளர், கொவிட் தடுப்பூசியைப் போட்டுக் கொள்பவர்களுக்கு சோளா பூரியை இலவசமாக வழங்குகிறார் என்று தமது உரையின்போது பிரதமர் குறிப்பிட்டார்.

சண்டிகரின் செக்டர்-29-இல் மிதிவண்டியில் சோளா பூரி விற்பனை செய்யும் அவரது உணவை இலவசமாகப் பெறுவதற்கு, அந்நாளிலேயே தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். அவரது இந்த முயற்சியைப் பாராட்டிய பிரதமர், சமூக நலனிற்கு செல்வத்தை விட, சேவை மனப்பான்மை, கடமை ஆகியவை அதிகம் தேவை என்பதை இந்த நடவடிக்கை உணர்த்தியிருப்பதாகத் தெரிவித்தார்.

----(Release ID: 1738838) Visitor Counter : 73