பிரதமர் அலுவலகம்
நாதுர்பரில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்
கருணைத் தொகை அறிவிப்பு
प्रविष्टि तिथि:
18 JUL 2021 11:23PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி, மகாராஷ்டிரா, நாதுர்பரில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தனது பிரார்த்தனைகளையும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரண்டு லட்ச ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,0000-மும் கருணைத் தொகையாக பிரதமர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “மகாராஷ்டிரா நாதுர்பரிலிருந்து வந்திருக்கும் செய்தி துக்ககரமானது. இந்த விபத்தில் தமது குடும்பத்தினரை இழந்து தவிப்பவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் குணமடைய எனது பிரார்த்தனைகள். பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு லட்ச ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,0000-மும் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
*****
(रिलीज़ आईडी: 1736661)
आगंतुक पटल : 207
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam