பிரதமர் அலுவலகம்

மும்பையில் சுவர் இடிந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகை அறிவிப்பு

प्रविष्टि तिथि: 18 JUL 2021 10:47AM by PIB Chennai

மும்பையின் செம்பூர் மற்றும் விக்ரோலியில் சுவர்கள் இடிந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50,000மும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “மும்பையின் செம்பூர் மற்றும் விக்ரோலியில் சுவர்கள் இடிந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகவும் வருந்தினேன். இந்தத் துயர தருணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் @narendramodi

மும்பையில் சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000மும் கருணைத் தொகையாக வழங்கப்படும்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

-----


(रिलीज़ आईडी: 1736551) आगंतुक पटल : 288
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam