மத்திய அமைச்சரவை

எஃகு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கோக்கிங் நிலக்கரி தொடர்பான ஒத்துழைப்பிற்காக இந்தியா மற்றும் ரஷிய கூட்டமைப்புக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 14 JUL 2021 4:06PM by PIB Chennai

எஃகு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கோக்கிங் நிலக்கரி தொடர்பான ஒத்துழைப்பிற்காக இந்திய குடியரசின் எஃகு அமைச்சகம் மற்றும் ரஷிய கூட்டமைப்பின் எரிசக்தி அமைச்சகத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பயன்கள்:

உள்ளீட்டு விலை குறைவதன் மூலம் ஒட்டுமொத்த எஃகு துறைக்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பலனளிக்கும். இதனால் நாட்டில் எஃகு விலை குறைய வாய்ப்புள்ளதோடு, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு மேம்படும்.

கோக்கிங் நிலக்கரி தொடர்பாக இந்தியா மற்றும் ரஷியாவுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கு அமைப்புரீதியான செயல்முறையை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கும்.

எஃகு துறையில் இந்தியா மற்றும் ரஷிய அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். கோக்கிங் நிலக்கரி வாங்கும் முறையை பரவலாக்குவதை ஒத்துழைப்பு தொடர்பான நடவடிக்கைகள் நோக்கமாக கொண்டுள்ளன.

*****************



(Release ID: 1735458) Visitor Counter : 278