பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

ஸ்வாமித்வா திட்ட செயல்பாட்டின் வளர்ச்சி நிலை: மத்திய அரசு ஆய்வு

Posted On: 13 JUL 2021 3:42PM by PIB Chennai

ஸ்வாமித்வா திட்டம் மற்றும் மின்னணு பஞ்சாயத்து திட்டங்களின் அமலாக்கம் குறித்து மத்திய பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சர் திரு கிரிராஜ் சிங், பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு கபில் மொரேஷ்வர் பாட்டில் ஆகியோர் ஆய்வு செய்தனர். வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளம், ஊரக மேம்பாடு, ஜல் சக்தி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் உள்ளிட்ட இதர அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று திரு கிரிராஜ் சிங் கூறினார்.

75-ஆவது சுதந்திர தினம் 2022-ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், கிராமசபை கூட்டங்கள் நிறுவனமயமாக்கப்படலாம் என்றும், இதுபோன்ற கூட்டங்களில் விரிவான கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தலாம் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட இணையமைச்சர் திரு கபில் மொரேஷ்வர் பாட்டில், பஞ்சாயத்துகள் தங்களது சொந்த வருவாயை அதிகரிப்பதற்கான தேவையை கோடிட்டுக் காட்டினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735069

*****

(Release ID: 1735069)



(Release ID: 1735089) Visitor Counter : 210