பிரதமர் அலுவலகம்
புனித 2-வது மோரன் மார் பசேலியோஸ் மார்தோமா பவுலோஸ் அவர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
12 JUL 2021 9:51AM by PIB Chennai
இந்திய ஆர்தடாக்ஸ் தேவாலயத்தின் முதன்மை தலைவரான புனித 2-வது மோரன் மார் பசேலியோஸ் மார்தோமா பவுலோஸ் அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “இந்திய ஆர்தடாக்ஸ் தேவாலயத்தின் முதன்மை தலைவரான புனித 2-வது மோரன் மார் பசேலியோஸ் மார்தோமா பவுலோஸ் மறைவினை அறிந்து துயருற்றேன். இறைசேவையும், கருணையும் நிறைந்த வளமான பாரம்பரியத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார். சோகமான இந்தத் தருணத்தில், ஆர்தடாக்ஸ் தேவாலயத்தின் உறுப்பினர்களுடன் எனது எண்ணங்கள் துணை நிற்கின்றன. அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
***
(रिलीज़ आईडी: 1734705)
आगंतुक पटल : 280
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada