சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல்: பொய்களும் உண்மைகளும்

Posted On: 07 JUL 2021 4:51PM by PIB Chennai

கடந்த ஒரு வாரத்தில் வழங்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய வாரத்தை விட 32 சதவீதம் குறைவு என்று சில ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

2021 ஜூலை மாதத்தில் வழங்கப்பட இருக்கும் தடுப்பு மருந்து டோஸ்களின் எண்ணிக்கை (தனியார் மருத்துவமனைகளுக்கான விநியோகம் உட்பட) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்படுகிறது. கொவிட் தடுப்பு மருந்துகளின் இருப்பின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வகுத்து கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2021 ஜூலை மாதத்தில் 12 கோடி டோஸ்களுக்கும் அதிகமான தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று தடுப்பு மருந்து தயாரிப்பாளர்கள் உடனான ஆலோசனைக்கு பிறகு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது. இன்று காலை வரை 2.19 கோடி டோஸ்களுக்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் ஜூலை மாதத்திற்கான ஒதுக்கீட்டில் இருந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மாநிலங்களுக்கு அனுப்பப்படும் தடுப்பு மருந்துகள் குறித்த தகவல்கள் அவற்றுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப் படுகின்றன.

மேலும், தடுப்பு மருந்து வழங்கல் அளவை அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றுக்கு தேவைப்படும் அதிகமான டோஸ்கள் குறித்து முன்கூட்டியே தெரியப்படுத்துமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

 

----


(Release ID: 1733411) Visitor Counter : 244