சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஜூலை மாதத்தில் கிடைக்கும் கொவிட் தடுப்பூசிகள் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளன

Posted On: 06 JUL 2021 6:29PM by PIB Chennai

ராஜஸ்தானில் கொவிட் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கடந்த 2 நாட்களாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

2021 ஜூலை மாதத்தில், எவ்வளவு கொவிட் தடுப்பூசிகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கிடைக்கும் என முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.  கொவிட் தடுப்பூசி கிடைப்பதற்கு ஏற்ப தடுப்பூசி போடுவதை திட்டமிடும்படியும் மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஜூலை 1ம் தேதி நிலவரப்படி ராஜஸ்தானிடம் பயன்படுத்தப்படாத 1.69 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் இருப்பு இருந்தன. தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை ராஜஸ்தான் 8.89 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து இலவசமாக பெற்றது. மேலும், ஜூலை மாதம் முடிவதற்குள் ராஜஸ்தான் மேலும் 39 லட்சத்து 51 தடுப்பூசிகளை பெறவுள்ளது. ஜூலை மாதம் முழுவதும், 50 லட்சத்து 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை ராஜஸ்தான் பெறுகிறது. தடுப்பூசி உற்பத்தியை பொறுத்து இந்த அளவு அதிகரிக்கப்படலாம். மேலும், கொவிட் தடுப்பூசிகள் அதிகம் தேவைப்பட்டால், அதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கும்படி மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

 

தடுப்பூசிகள் உயிரியல் தயாரிப்பு என்பதால், இதன் உற்பத்திக்கு நாளாகும். தயாரித்தவுடன் தடுப்பூசிகள் தரம் மற்றும் பாதுகாப்பு பரிசோதனைக்கு செல்லும். அதனால் தடுப்பூசி உற்பத்திக்கு காலம் ஆகும். தயாரித்தவுடன் அவை  உடனடியாக விநியோகிக்கப்படுவதில்லை.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1733160

*****************



(Release ID: 1733174) Visitor Counter : 214