பிரதமர் அலுவலகம்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு ஷரத் திரிபாதியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 01 JUL 2021 9:46AM by PIB Chennai

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு ஷரத் திரிபாதியின் அகால மறைவு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், "திரு ஷரத் திரிபாதியின் அகால மரணம் என்னையும், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் சமுதாயத்திற்கு சேவை செய்வதையும், நலிவுற்ற மக்களுக்காக உழைப்பதையும் நேசித்தார். கபீர்தாசரின் கொள்கைகளை பிரபலப்படுத்த அவர் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.ன்னாரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று கூறியுள்ளார்.


(रिलीज़ आईडी: 1731823) आगंतुक पटल : 236
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam