சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையிலான கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா மைல்கல் சாதனை
प्रविष्टि तिथि:
28 JUN 2021 11:09AM by PIB Chennai
நாடு தழுவிய கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் மேலும் ஒரு மைல்கல் சாதனையாக அமெரிக்காவை விட அதிக தடுப்பூசிகளை இந்தியா செலுத்தியுள்ளது. தடுப்பூசித் திட்டம் இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கிய நிலையில், அமெரிக்காவில் அதற்கு முன்பாக கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ம் நாளே தொடங்கியது.
இன்று காலை 8 மணி வரை, இந்தியாவில் 32,36,63,297 டோஸ் தடுப்பூசிகளும், அமெரிக்காவில் 32,33,27,328 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் நம் நாட்டில் 17,21,268 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,148 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, 21-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.
நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,72,994 ஆகக் குறைந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.89 சதவீதமாகும்.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 13,409 குறைந்துள்ளது.
தொடர்ந்து 46-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 58,578 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களை விடக் கூடுதலாக 12,430 பேர் குணமடைந்தனர்.
இதுவரை மொத்தம் 2,93,09,607 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 96.80 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 15,70,515 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 40,63,71,279 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.81 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.94 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 21 நாட்களாக இந்த எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730809
***************
(रिलीज़ आईडी: 1730861)
आगंतुक पटल : 274
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada