பிரதமர் அலுவலகம்
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள செய்தி
Posted On:
26 JUN 2021 11:24AM by PIB Chennai
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமான இன்று, நமது சமூகத்தில் இருந்து போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக அடிமட்ட அளவில் பணியாற்றும் அனைவரையும் பாராட்டுகிறேன். உயிர்களைப் பாதுகாக்கும் (#SaveLives) ஒவ்வொரு நடவடிக்கையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. போதைப் பொருட்கள், இருளையும், கெடுதலையும், பேரழிவையும் ஏற்படுத்துகின்றன.
போதைப் பொருட்கள் பற்றிய உண்மையைப் பகிர்வதில் (#ShareFactsOnDrugs) நமது உறுதித் தன்மையை மீண்டும் வலியுறுத்துவதோடு, போதைப் பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நமது தொலைநோக்குப் பார்வையையும் நனவாக்குவோம். நினைவில் கொள்ளுங்கள்- அடிமையாதல் என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்வதோ அல்லது டாம்பிக வாழ்க்கையின் வெளிப்பாடோ அல்ல. போதைப் பொருட்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்வது சம்பந்தமான அம்சங்கள் நிறைந்த பழைய மனதின் குரல் (#MannKiBaat) நிகழ்ச்சியினைப் பகிர்கிறேன் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
----
(Release ID: 1730517)
Visitor Counter : 220
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam