பிரதமர் அலுவலகம்
தடுப்பு மருந்து வழங்கலில் படைக்கப்பட்டுள்ள சாதனைக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
21 JUN 2021 7:58PM by PIB Chennai
தடுப்பு மருந்து வழங்கல் எண்ணிக்கையில் இன்று படைக்கப்பட்டுள்ள சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, கொரோனா முன்கள பணியாளர்களை அவர்களது கடின உழைப்புக்காக பாராட்டினார்.
"தடுப்பு மருந்து வழங்கல் எண்ணிக்கையில் இன்று படைக்கப்பட்டுள்ள சாதனை மகிழ்ச்சி அளிக்கிறது. கொவிட்-19-ஐ எதிர்த்துப் போராடுவதற்கான நமது வலுவான ஆயுதமாக தடுப்பு மருந்து உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். அதிக அளவில் மக்கள் தடுப்பு மருந்தை பெறுவதை உறுதி செய்வதற்காக கடுமையாக உழைக்கும் முன்கள வீரர்களுக்கு பாராட்டுகள். இந்தியா சிறப்பாக செயல்படுகிறது!," என்று தமது டிவிட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
----
(रिलीज़ आईडी: 1729176)
आगंतुक पटल : 296
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam