மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 குறித்து மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு செயல்முறைகள் பிரிவு கவலை தெரிவித்துள்ளதற்கு இந்தியாவின் நிரந்தர இயக்கம் பதிலளிப்பு
Posted On:
20 JUN 2021 1:13PM by PIB Chennai
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் மின்னணு ஊடகம் நெறிமுறைகள்) விதிகள், 2021 குறித்து மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு செயல்முறைகள் பிரிவு கவலை தெரிவித்துள்ளதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இந்தியாவின் நிரந்தர இயக்கம் மற்றும் ஜெனிவாவில் உள்ள இதர சர்வதேச அமைப்புகள் பதிலளித்துள்ளன.
இந்தியாவின் நிரந்தர இயக்கம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
“வரைவு விதிகளை தயாரிப்பது தொடர்பாக மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவை கடந்த 2018-ஆம் ஆண்டு தனிநபர்கள், பொதுமக்கள், தொழில்துறை சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட பலதரப்பு பங்குதாரர்களின் ஆலோசனைகளையும், பொதுமக்களின் கருத்துக்களையும் பெற்றது என்பதை இந்தியாவின் நிரந்தர இயக்கம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது. அதன் பிறகு அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்தில் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு, அதற்குத் தகுந்தவாறு விதிகள் இறுதி செய்யப்பட்டன.
இந்தியாவின் ஜனநாயக ஆதார சான்றுகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதை இந்தியாவின் நிரந்தர இயக்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமையை இந்திய அரசியலமைப்பு உறுதிசெய்துள்ளது. தனித்தியங்கும் நீதித்துறை மற்றும் ஊடகம் ஆகியவை இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பின் ஒரு அங்கமாகும்.
தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை சம்பந்தப்பட்ட சிறப்பு பிரதிநிதிகளின் பார்வைக்குக் கொண்டு செல்லுமாறு இந்தியாவின் நிரந்தர இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு செயல்முறைகள் பிரிவின் உயரிய நோக்கத்திற்கான உறுதித்தன்மையைப் புதுப்பிக்கும் வாய்ப்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இந்தியாவின் நிரந்தர இயக்கம் மற்றும் ஜெனிவாவில் உள்ள இதர சர்வதேச அமைப்புகள் இதனைக் கருதுகின்றன.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728738
----
(Release ID: 1728785)
Visitor Counter : 330