பிரதமர் அலுவலகம்

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறைச் செயலாளர் டாக்டர் குருபிரசாத் மொகாபத்ராவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 19 JUN 2021 10:07AM by PIB Chennai

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் செயலாளர் டாக்டர் குருபிரசாத் மொகாபத்ராவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறைச் செயலாளர் டாக்டர் குருபிரசாத் மொகாபத்ராவின் மறைவை அறிந்து ஆழ்ந்த துயருற்றேன். குஜராத் மற்றும் மத்தியில்  நான் அவருடன் அதிகளவில்  பணியாற்றியுள்ளேன். நிர்வாக விஷயங்களில் அவர் சிறந்த புரிதல் கொண்டிருந்ததுடன், அனைவரும் அறிந்தவாறு புதிய கண்டுபிடிப்புகளில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று குறிப்பிட்டுள்ளார்.

*****************


(रिलीज़ आईडी: 1728518) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam