சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: கடந்த 24 மணி நேரத்தில் 70,421 பேருக்கு தொற்று உறுதி

प्रविष्टि तिथि: 14 JUN 2021 2:09PM by PIB Chennai

இந்தியாவில் கொவிட் அன்றாட பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 70,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, 7-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 1 லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.

நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 66 நாட்களுக்கு பிறகு  10 லட்சத்திற்கும் கீழ் 9,73,158 ஆக பதிவாகியுள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 3.30 சதவீதமாகும்.

சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 53,001 சரிந்துள்ளது.

தொடர்ந்து 32-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,19,501 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களை விடக் கூடுதலாக 49,080 பேர் குணமடைந்தனர்.

இதுவரை மொத்தம் 2,81,62,947 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 95.43 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 14,92,152 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 37,96,24,626 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 4.54 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி வீதம் 4.72 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 21 நாட்களாக இந்த எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 35,32,375 முகாம்களில் 25,48,49,301 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726923

*****************


(रिलीज़ आईडी: 1726966) आगंतुक पटल : 278
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam