ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

மாநிலங்களுக்குக் கூடுதலாக 1,06,300 அம்ஃபோடெரிசின்-பி குப்பிகள் ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா அறிவிப்பு

Posted On: 14 JUN 2021 1:44PM by PIB Chennai

லிபோசோமல் அம்ஃபோடெரிசின்-பி மருந்தின் இருப்பை உறுதி செய்வதற்காக கூடுதலாக 1,06,300 குப்பிகள் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய நிறுவனங்களுக்கும் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு டி வி சதானந்தகவுடா சுட்டுரைச் செய்தி வாயிலாக அறிவித்துள்ளார்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு மொத்தம் 53,000 வழக்கமான அம்ஃபோடெரிசின்-பி குப்பிகள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சீரான விநியோகம் மற்றும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்வதற்காக வழக்கமான அம்ஃபோடெரிசின்-பி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த சுட்டுரைச் செய்தியில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726919

*****************


(Release ID: 1726938) Visitor Counter : 204