சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மூன்றாவது நாள்: இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றின் பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவு

Posted On: 10 JUN 2021 10:28AM by PIB Chennai

இந்தியாவில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94,052ஆகக் குறைந்துள்ளது. இதையடுத்து, மூன்றாவது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.

நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கைத் தொடர்ந்து கணிசமாக சரிந்து, தற்போது 11,67,952ஆக உள்ளது. இது, நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் வெறும் 4.00 சதவீதமாகும். இந்த எண்ணிக்கை 10-வது நாளாக 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 63,463 பேர் குறைந்துள்ளனர்.

தொடர்ந்து 28-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,51,367 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களை விட கூடுதலாக 57,315 பேர் குணமடைந்தனர்.

இதுவரை மொத்தம் 2,76,55,493 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 94.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,51,367 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 20,04,690 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 37,21,98,253 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5.43 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி வீதம் 4.69 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 17 நாட்களாக இந்த எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 24 கோடி தடுப்பூசிகளும், கடந்த 24 மணி நேரத்தில் 33,79,261 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 33,82,775 முகாம்களில் 24,27,26,693 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725848

 

-----


(Release ID: 1725942) Visitor Counter : 229