சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மூலம் கோவின் இணையளத்தில் பதிவு செய்யலாம் : மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

Posted On: 07 JUN 2021 3:37PM by PIB Chennai

நாடு முழுவதும் பல பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி போட கோவின் என்ற டிஜிட்டல் தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தடுப்பூசி முறைகளை ஒழுங்குமுறைப்படுத்த, மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கோவின் 2.0 இணையளத்தில் பதிவு செய்யும்போது, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையையும் (UDID) , போட்டோ அடையாள அட்டையாக சேர்க்கும்படி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுவரை 7 வகையான போட்டோ அடையாள அட்டைகள் மட்டுமே கோவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையும் சேர்க்கப்படுகிறது

மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையில்  பெயர், பிறந்த தேதி, பாலினம், போட்டோ உட்பட தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளதாகவும், கொவிட் தடுப்பூசி பதிவுக்கு இதை பயன்படுத்தலாம் எனவும்  மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கு தேவையான விதிமுறைகள் கோவின் இணையளத்தில் விரைவில் சேர்க்கப்படும். கொவிட் தடுப்பூசி போடுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, அனுமதிக்கப்பட்ட போட்டோ அடையாள அட்டையாக பயன்படுத்துவற்கு விரிவாக விளம்பரப்படுத்தும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவறுத்தியுள்ளது.

யுடிஐடி அடையாள அட்டையின் மாதிரி மற்றும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/ Press Release Page.aspx?PRID=1725057

 

------



(Release ID: 1725088) Visitor Counter : 201