சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றிய சமீபத்திய தகவல்கள்
Posted On:
28 MAY 2021 9:21AM by PIB Chennai
தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 23,43,152 ஆக மேலும் குறைந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76,755 பேர் குணம் அடைந்தனர்.
1.86 லட்சம் புதிய பாதிப்புகளுடன், பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த 44 நாட்களில் குறைந்த அளவில் தினசரி பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
2,48,93,410 பேர் நாடு முழுவதும் இதுவரை குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 2,59,459 நோயாளிகள் குணமடைந்தனர்.
தொடர்ந்து 15-வது நாளாக குணமடைபவர்களின் எண்ணிக்கை புதிய பாதிப்புகளை விட அதிகமாக உள்ளது.
குணமடைதல் விகிதம் 90.34% ஆக அதிகரித்துள்ளது.
வாராந்திர தொற்று உறுதிப்படுத்தல் விகிதம் தற்போது 10.42% ஆக உள்ளது.
தினசரி தொற்று உறுதிப்படுத்தல் விகிதம் 9.00% ஆக உள்ளது, தொடர்ந்து நான்கு நாட்களாக 10 சதவீதத்திற்கும் கீழே உள்ளது.
தேசிய தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையின் கீழ், 20.57 கோடி டோஸ்கள் இது வரை வழங்கப்பட்டுள்ளன.
பரிசோதனை திறன் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது- கடந்த 24 மணி நேரத்தில் 20.7 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
*****************
(Release ID: 1722487)
Visitor Counter : 148
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada