சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தேசிய அளவில் மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்தது

Posted On: 21 MAY 2021 11:53AM by PIB Chennai

•    நாட்டில் செலுத்தப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை  இன்று 19 கோடியைக் ( 19,18,79,503) கடந்துள்ளதால், இந்தியா தனது தடுப்பூசி இயக்கத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
•    தற்காலிக அறிக்கையின்படி, இன்று காலை 7 மணி வரை, மொத்தம் 19,18,79,503 தடுப்பூசி மருந்துகள் 27,53,883 அமர்வுகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. மொத்த எண்ணிக்கையில் 66.32 சதவிகிதம்,  பத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 
•    கடந்த 24 மணி நேரத்தில் 20.61 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இது, ஒரே நாளில் நடத்தப்பட்ட மிக அளவிலான சோதனைகள் என்ற புதிய மைல்கல்லாகும்.
•    தினசரி தொற்று விகிதம் 12.59% ஆகக் குறைந்துள்ளது.
•    நம் நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 3,57,295 பேர் குணமடைந்துள்ளனர். இது புதிய நோயாளிகளின் எண்ணிக்கையைவிட அதிகம்.
•    நாட்டில் மொத்தம் 2,27,12,735 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தேசிய குணமடையும் விகிதம் 87.25 ஆக அதிகரித்துள்ளது.
•    இந்தியா தொடர்ந்து ஐந்து நாளாக, 3 லட்சத்துக்கும் குறைவான புதிய தொற்றாளர்களைப் பதிவு செய்துள்ளது.
•    கடந்த 24 மணி நேரத்தில் 2,59,551 பேர் கொவிட் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்
•    கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் அதிக அளவாக 35,579 பேரும், கேரளாவில் 30,491 பேரும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்..
•    நாடு முழுவதும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று  30,27,925 ஆக சரிந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720526

••••••••••••••(Release ID: 1720585) Visitor Counter : 55