பிரதமர் அலுவலகம்

பேராசிரியர் திரு எம்.எஸ். நரசிம்மனின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 16 MAY 2021 11:59AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, பேராசிரியர் திரு எம்.எஸ். நரசிம்மனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய தலைசிறந்த கணிதவியலாளராக பேராசிரியர் திரு எம்.எஸ். நரசிம்மன் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். கணிதத்தைக் கடந்த அவரது படைப்புகளிலும் அவர் முத்திரை பதித்தார். அவரது மறைவினால் மிகவும் துயரடைந்தேன். அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி!”, என்று தெரிவித்துள்ளார்.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1719068) வருகையாளர் எண்ணிக்கை : 236