சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சர்வதேச சமூகம் அனுப்பியுள்ள கொவிட் நிவாரண பொருட்களின் அண்மைக் தகவல்கள்

Posted On: 11 MAY 2021 3:42PM by PIB Chennai

கொவிட் தொற்றின் பாதிப்பு பெரும் மடங்கு நாட்டில் உயர்ந்திருப்பதால் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் நிவாரண மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்கி வருகின்றன.

இந்த நிவாரணப் பொருட்களை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரைந்து விநியோகிக்கும் பணியில்அரசின் முழுமையானஅணுகுமுறையுடன் பல்வேறு அமைச்சகங்களும் துறைகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

2021 ஏப்ரல் 27 முதல் மே 10 வரை பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் இணைந்து 9200 பிராணவாயு செறிவூட்டிகள், 5243 பிராணவாயு சிலிண்டர்கள், 19 பிராணவாயு உற்பத்திக் கருவிகள், 5913 செயற்கை சுவாசக் கருவிகள், சுமார் 3.44 லட்சம் ரெமிடெசிவிர் குப்பிகள் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன.

2021 மே 10 அன்று ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல், அமெரிக்காநெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து  பெறப்பட்ட முக்கிய பொருட்கள்:

செயற்கை சுவாசக் கருவிகள் (610)

•  பிராணவாயு செறிவூட்டிகள் (300)

ஃபேவிபிராவிர்- 12600 அட்டைகள் (ஒவ்வொரு அட்டையும் 40 மாத்திரைகளைக் கொண்டுள்ளன)

பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வழங்கப்படும் பொருட்கள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் துரிதகதியில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்காக பிரத்தியேக ஒருங்கிணைப்பு மையம் ஒன்றை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717668

-----(Release ID: 1717736) Visitor Counter : 154