பிரதமர் அலுவலகம்

திரு பிரதாப்பாய் ஷா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 06 MAY 2021 5:42PM by PIB Chennai

குஜராத் முன்னாள் நிதியமைச்சர் திரு பிரதாப்பாய் ஷா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுட்டுரை ஒன்றில், பொது வாழ்வு மற்றும் பத்திரிகை துறையில் திரு பிரதாப்பாய் ஷா ஆற்றிய பங்களிப்பை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். பிரிந்து சென்றவரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திப்பதாகவும். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் திரு. நரேந்திர  தெரிவித்துள்ளார்.

*****************



(Release ID: 1716606) Visitor Counter : 132