ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
நாட்டில் ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி மும்மடங்கு உயர்வு: மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
प्रविष्टि तिथि:
04 MAY 2021 1:43PM by PIB Chennai
நாட்டில் ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி விரைவாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில நாட்களிலேயே ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தியை இந்தியா மும்மடங்கு உயர்த்தியுள்ளதுடன், அதிகரித்துவரும் தேவையும் விரைவில் பூர்த்தி செய்யப்படும். மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று இவ்வாறு அறிவித்தார்.
இந்த வருடம் ஏப்ரல் 12-ஆம் தேதி 37 லட்சமாக இருந்த ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி, மே 4-ஆம் தேதி, 1.05 கோடியாக வளர்ச்சி அடைந்தது.
அதிகரித்துவரும் தேவையைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 12-ஆம் தேதி 20 ஆக இருந்த ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி செய்யும் ஆலைகளின் எண்ணிக்கை, மே 4 அன்று 57 ஆக உயர்ந்தது.
கொரோனாவுக்கு எதிராக, இந்திய அரசு இடைவிடாது பணியாற்றி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715876
****
(रिलीज़ आईडी: 1715914)
आगंतुक पटल : 264
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam