பிரதமர் அலுவலகம்

குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் உருவான தினம்: பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAY 2021 9:50AM by PIB Chennai

குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இன்று உருவாக்கப்பட்டன. நாட்டு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்த தலைசிறந்த மக்களின் வசிப்பிடமாக இரு மாநிலங்களும் விளங்குகின்றன. கொவிட்-19 நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்த மாநிலங்கள் வெற்றி அடைந்து, இம்மாநில மக்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறட்டும்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1715315) வருகையாளர் எண்ணிக்கை : 229