பிரதமர் அலுவலகம்

பண்டிட் ராஜன் மிஸ்ரா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 25 APR 2021 8:41PM by PIB Chennai

பண்டிட் ராஜன்  மிஸ்ரா மறைவுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாரம்பரிய இசை உலகில், பண்டிட் ராஜன் மிஸ்ரா அழியாத முத்திரை பதித்துள்ளார் என்றும் பனாரஸ் கரானாவுடன் இணைந்திருந்த மிஸ்ராவின் மறைவு, கலை மற்றும் இசை உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.   இந்த சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் பிரதமர் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

                                                                                     **


(रिलीज़ आईडी: 1714093) आगंतुक पटल : 222
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam