சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டில் போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 11.72 கோடியைக் கடந்தது: கொவிட் பரிசோதனை 26 கோடியைக் கடந்தது

प्रविष्टि तिथि: 16 APR 2021 10:39AM by PIB Chennai

நாட்டில் போடப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை, இன்று 11.72 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணி வரை மொத்தம்  11,72,23,509 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  கடந்த 24 மணி நேரத்தில் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 90வது நாளான நேற்று 27,30,359 தடுப்பூசிகள் போடப்பட்டன.

நாடு முழுவதும் இதுவரை மொத்த 26 கோடி கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 5.42 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாட்டில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 79.10 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, சட்டீஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்.  

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக நேற்று 61,695 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15, 69,743- எட்டியுள்ளது. இவர்கள் மொத்த பாதிப்பில் 10.98 சதவீதம்.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,25,47,866 - எட்டியுள்ளது. குணமடைந்தோர் வீதம் 87.80.  கடந்த 24 மணி நேரத்தில் 1,18,302 பேர் குணமடைந்துள்ளனர். 1,185 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1712177

------


(रिलीज़ आईडी: 1712224) आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam