சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 11 கோடியை கடந்தது: தடுப்பூசி திருவிழாவின் 4வது நாளில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டன
இடுகை இடப்பட்ட நாள்:
14 APR 2021 11:40AM by PIB Chennai
நாட்டில் போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை இன்று 11 கோடியை கடந்தது. இன்று காலை 7 மணி வரை 11,11,79,578 தடுப்பூசிகள் போடப்பட்டன.
88வது நாளான நேற்று 26,46,528 தடுப்பூசிகள் போடப்பட்டன.
கொவிட் தொற்றை ஒழிக்கும் முயற்சியில், மற்றொரு இலக்கு இன்று எட்டப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளின் எண்ணிக்கை 26 கோடியை கடந்தது.
இந்தியாவில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,84,372 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 82.04 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர், தில்லி, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தினசரி கொவிட் பாதிப்பு 60,212-ஆக உள்ளது.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 13,65,704 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,23,36,036-ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 82,339 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1027 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1711689
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1711871)
வருகையாளர் எண்ணிக்கை : 256
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam