பிரதமர் அலுவலகம்

ஏப்ரல் 8, 2021: ஸ்ரீ குரு தேஜ் பகதூர் அவர்களின் 400-வது பிறந்த நாள் விழாவை (பிரகாஷ் புரப்) கொண்டாடுவதற்கான உயர்மட்டக் குழு கூட்டத்திற்கு பிரதமர் தலைமை

प्रविष्टि तिथि: 07 APR 2021 10:59AM by PIB Chennai

ஸ்ரீ குரு தேஜ் பகதூர் அவர்களின் 400-வது பிறந்த நாள் விழா  (பிரகாஷ் புரப்) கொண்டாட்டங்களை திட்டமிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவின் கூட்டம் பிரதமர் திரு.நரேந்திர மோடியின்  தலைமையில் நாளை (ஏப்ரல் 8, 2021) நடைபெற உள்ளது. நாளை காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா பங்கேற்கிறார். குரு தேஜ் பகதூரின் 400-வது பிறந்தநாளையொட்டி ஒரு வருட காலத்திற்கு நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் இந்தக் கூட்டத்தில் திட்டமிடப்பட உள்ளன.

 உயர்மட்டக் குழுவைப் பற்றி

ஸ்ரீ குரு தேஜ் பகதூர் அவர்களின் 400-வது பிறந்தநாள் விழா தொடர்பான கொள்கைகள், திட்டங்கள், நிகழ்வுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக இந்த உயர்மட்டக் குழுவை, மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதியன்று அமைத்தது. இந்தக் குழு இந்த நிகழ்வுகளை கண்காணிக்கவும் செய்யும். பிரதமரை தலைவராக கொண்டுள்ள இந்த உயர்மட்டக் குழுவில் 70 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

*********


(रिलीज़ आईडी: 1710019) आगंतुक पटल : 223
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Assamese , English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam