பிரதமர் அலுவலகம்

உலகின் உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தின் வளைவு இணைப்புப்பணி நிறைவடைந்ததை ஒட்டி பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 05 APR 2021 7:50PM by PIB Chennai

உலகின் உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தின் வளைவு இணைப்புப் பணியை இந்திய ரயில்வே நிறைவு செய்ததை ஒட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நமது நாட்டு மக்களின் திறமையும், நம்பிக்கையும் உலகத்தின் முன் ஒரு உதாரணத்தை உருவாக்கி வருகிறது என்று டிவிட்டர் பதிவொன்றில் திரு மோடி தெரிவித்துள்ளார். இந்த கட்டுமானம் நவீன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் திறனை வெளிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், ‘லட்சியத்தை அடைதல்எனும் கொள்கையோடு மாறிவரும் பணி கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

-----


(रिलीज़ आईडी: 1709727) आगंतुक पटल : 281
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam