சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 7.5 கோடியை கடந்தது
Posted On:
04 APR 2021 11:19AM by PIB Chennai
நாடு முழுவதும் இன்று காலை 7 மணி வரை போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 7,59,79,651.
இவற்றில் முதல் டோஸ் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6.5 கோடி (6,57,39,470). 2வது டோஸ் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1 கோடியை (1,02,40,181) கடந்தது.
78வது நாளான நேற்று மொத்தம் 27,38,972 தடுப்பூசிகள் போடப்பட்டன.
கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு புதிதாக கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.96 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, தில்லி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக தினசரி கொவிட் பாதிப்பு 49,447-ஆக உள்ளது. 12 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 6,91,597. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,16,29,289- எட்டியுள்ளது.
குணமடைந்தோர் விகிதம் 93.14 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில், 60,048 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 513 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1709429
*****************
(Release ID: 1709481)
Visitor Counter : 241
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam