பிரதமர் அலுவலகம்
‘தேர்வு வீரர்கள்’ புத்தகத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை பிரதமர் அறிவித்தார்
நமது இளைஞர்கள் தேர்வுகளை எழுதி வரும் நிலையில் நாம் அனைவரும் அவர்களுக்கு உதவுவோம்: பிரதமர்
प्रविष्टि तिथि:
29 MAR 2021 5:47PM by PIB Chennai
‘தேர்வு வீரர்கள்’ (எக்ஸாம் வாரியர்ஸ்) புத்தகத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
‘தேர்வு வீரர்கள்’ புதிய பதிப்பில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் மதிப்புமிகுந்த உள்ளீடுகள் இணைக்கப்பட்டு செரிவூட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குறிப்பாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் குறிப்பிடத்தக்க புதிய பகுதிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“நமது இளைஞர்கள் தேர்வுகளை எழுதி வரும் நிலையில் நாம் அனைவரும் அவர்களுக்கு உதவுவோம்,” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், “தேர்வு காலம் தொடங்குவதால், #ExamWarriors புதுப்பிக்கப்பட்ட பதிப்பை பகிர நான் மகிழ்ச்சியடைகிறேன்.
புதிய சூத்திரங்களும், ஆர்வமூட்டக்கூடிய பல்வேறு செயல்பாடுகளும் இப்புத்தகத்தில் உள்ளன. தேர்வுக்கு முன்னர் மன அழுத்தமில்லாமல் இருப்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது.
தேர்வுக்கு தயாராவதை எவ்வாறு மகிழ்ச்சியுடையதாக்குவது?
வீட்டில் தேர்வுக்கு தயாராகும் போது சுவாரசியமான ஏதேனும் ஒன்றை நம்மால் செய்ய முடியுமா?
இதற்கெல்லாம் ஒரு தீர்வுண்டு...நமோ செயலியில் உள்ள புத்தம் புதிய #ExamWarriors பகுதி.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சுவாரசியமான பல்வேறு செயல்பாடுகள் இதில் உள்ளன.
#ExamWarriors புதிய பதிப்பில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் மதிப்புமிகுந்த உள்ளீடுகள் இணைக்கப்பட்டு செரிவூட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குறிப்பாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் குறிப்பிடத்தக்க புதிய பகுதிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
நமது இளைஞர்கள் தேர்வுகளை எழுதி வரும் நிலையில் நாம் அனைவரும் அவர்களுக்கு உதவுவோம்,” என்று கூறியுள்ளார்.
*****************
(रिलीज़ आईडी: 1708318)
आगंतुक पटल : 304
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Kannada
,
Malayalam