மத்திய அமைச்சரவை

தேசிய சுகாதார இயக்கம் 2019-20-இன்‌ வளர்ச்சி பற்றி மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைப்பு

Posted On: 23 MAR 2021 3:21PM by PIB Chennai

நிதியாண்டு 2019-20-இல் தேசிய சுகாதார இயக்கத்தின் வளர்ச்சி குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையிடம் முறையாக எடுத்துரைக்கப்பட்டது. 

பேறுகாலத்தில் தாய் இறப்பு விகிதம், சிசு உயிரிழப்பு விகிதம், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம், ஒட்டுமொத்த குழந்தைப்பேறு விகிதம் உள்ளிட்டவை துரித காலத்தில் குறைந்துள்ளன. காசநோய், மலேரியா, டெங்கு, தொழுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான திட்டங்களின் வளர்ச்சி குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

விவரம்:

குழந்தைப் பருவத்தில் நிமோனியாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சான்ஸ் முன்முயற்சி, பேறுகாலத்தில் தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் நல்வாழ்விற்கான அனைத்து திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட சுமன் முன்முயற்சி, பேறுகால மருத்துவ பணியியல் சேவைகள் முன்முயற்சி போன்ற புதிய நடவடிக்கைகளை 2019-20-ஆம் ஆண்டில் தேசிய சுகாதார இயக்கம்  அறிமுகப்படுத்தியது.

செயல்படுத்துவதற்கான வியூகம்:

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு மாவட்ட மருத்துவமனைகள் வரை குறைந்த விலையில், தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு, மனித வளம், மருத்துவ சேவையை ஊரக பகுதிகளில் வழங்குவது இதன் மற்றொரு முக்கிய நோக்கமாகும்.

இலக்குகள்:

•        பேறுகாலத்தில் தாய் இறப்பு விகிதத்தை 1/1000-ஆகக் குறைப்பது

•        சிசு உயிரிழப்பு விகிதத்தை 25/1000-ஆகக் குறைப்பது

•        ஒட்டுமொத்த குழந்தைப்பேறு விகிதத்தை 2.1-ஆகக் குறைப்பது

•        தொழுநோயின் பரவலை பத்தாயிரம் மக்கள் தொகையில் 1-க்கும் குறைவாகக் குறைப்பது

•        மலேரியாவின் பாதிப்பை ஆண்டுக்கு ஆயிரத்துக்கு 1-க்கும் குறைவாகக் குறைப்பது

•        தொற்று நோய்கள், தொற்றும் தன்மை அல்லாத நோய்கள், காயங்கள் மற்றும் அவசரகால நோய்களினால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நோயின் தன்மையைக் கட்டுப்படுத்துவது

•        மருத்துவ செலவினங்களுக்கான தொகையைக் குறைப்பது

•        2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து காசநோயை முற்றிலும் ஒழிப்பது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1706902

*****************(Release ID: 1706958) Visitor Counter : 229