மத்திய அமைச்சரவை

நீர்வளத் துறையில் இந்தியா, ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 23 MAR 2021 3:21PM by PIB Chennai

இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீர்வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கத் துறை  மற்றும் ஜப்பான் அரசின் நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீர் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகம் ஆகியவற்றுக்கிடையே நீர்வளம் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு விளக்கப்பட்டது.

பலன்கள்:

தகவல், அறிவு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அறிவியல் சார்ந்த அனுபவம் ஆகியவற்றை அதிகரிக்கவும், இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுத் திட்டங்களை செயல்படுத்தவும், நீர் மற்றும் டெல்டா மேலாண்மை, மற்றும் நீர் தொழில்நுட்பத் துறையில் நீண்டகால ஒத்துழைப்பை உருவாக்குவதற்காகவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

நீர் பாதுகாப்பு, மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசன வசதிகள் மற்றும் நீர் வள மேம்பாட்டில் நிலைத்தன்மை ஆகியவற்றை அடைவதற்கு இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் உதவும்.

*****************(Release ID: 1706919) Visitor Counter : 192