சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3.5 கோடியைக் கடந்தது: நேற்று ஒரே நாளில் 21 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி

Posted On: 17 MAR 2021 10:42AM by PIB Chennai

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கொவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 28,903 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 71.10 சதவீதம் பேர், மேற்கண்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் மட்டும் 17,864 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 1,970 பேருக்கும், பஞ்சாப்பில் 1,463 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் சிசிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 2.34 லட்சமாக உள்ளது.

இன்று காலை 7 மணி வரை 3.5 கோடி பேருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர், 1,15,89,444 பேர்.

 60வது நாளான நேற்று 21 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு (21,17,104) தடுப்பூசி போடப்பட்டது

இந்தியாவில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 1,10,45,284- தொட்டது. இது 96.56 சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில் 188 பேர் உயிரிழந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1705350

******

(Release ID: 1705350)



(Release ID: 1705398) Visitor Counter : 217