சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது
प्रविष्टि तिथि:
14 MAR 2021 11:36AM by PIB Chennai
நாட்டில் இன்று காலை 7 மணி வரை, கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கு 3 கோடியை (2,97,38,409) நெருங்கியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 81,87,007 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
57வது நாளான நேற்று, 15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு (15,19,952) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆனால், சில மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 25,320 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் 87.73 சதவீதம் பேர்.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 15,602 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக கேரளாவில் 2,035 பேருக்கும், பஞ்சாப்பில் 1510 பேருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 2.10 லட்சமாக (2,10,544) உள்ளது.
நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணக்கை 1,09,89,897- ஆக உள்ளது.
குணமடைந்தோர் வீதம் 96.75 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 16,637 பேர் குணமடைந்துள்ளனர். 161 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1704694
*****************
(रिलीज़ आईडी: 1704704)
आगंतुक पटल : 274
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam