சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனா தொற்று: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 85.91% புதிய பாதிப்புகள் பதிவு

Posted On: 11 MAR 2021 11:02AM by PIB Chennai

தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் கொவிட் தொற்றின் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகமாக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளில் 85.91 சதவீதம் இந்த மாநிலங்களில் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 22,854 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 13,659 நபர்களும் (அன்றாட புதிய பாதிப்புகளில் சுமார் 60%), கேரளாவில் 2,475 பேரும், பஞ்சாபில் 1,393 பேரும், புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் 671 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,89,226 ஆகப் பதிவாகியுள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பில் 1.68 சதவீதமாகும்.

இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும் 4,78,168 முகாம்களில்‌ 2.56 கோடி (2,56,85,011) பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 71,97,100 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 40,13,249 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 70,54,659 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 6,37,281 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 9,67,058 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 58,15,664 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19-ஆல் 126 உயிரிழப்புகள்  ஏற்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1704041

*********


(Release ID: 1704125) Visitor Counter : 239