பிரதமர் அலுவலகம்

ஜப்பான் பிரதமர் திரு. சுகா யோஷிஹைட்டுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடல்.

Posted On: 09 MAR 2021 8:17PM by PIB Chennai

ஜப்பான் பிரதமர் திரு.  சுகா யோஷிஹைட்டுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியா-ஜப்பான் இடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் மதிப்பு அடிப்படையில் நிலவிய சிறப்பு யுக்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மை குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். 

கொவிட்-19 தொற்றுக்கு இடையிலும், கடந்தாண்டு இருதரப்பு பரிமாற்றங்கள் பராமரிக்கப்பட்டதை அவர்கள் பாராட்டினர். குறிப்பிட்ட துறைகளில் திறமையான தொழிலாளர்களை உருவாக்குவதில் ஒத்துழைப்புடன் செயல்பட சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அவர்கள் வரவேற்றனர் மற்றும் அதை விரைவில் அமல்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளனர்.

மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம், இந்தியா - ஜப்பான் இடையேயான இருதரப்பு யுக்தி கூட்டாண்மைக்கு ஜொலிக்கும் உதாரணம் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் அதை வெற்றிகரமாக அமல்படுத்தும் அவரது உறுதியையும் வெளிப்படுத்தினார்.

பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்களில் பரஸ்பர நலன் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்

பொதுவான சவால்களை தீர்ப்பதில் இரு நாடுகள் இடையேயான கூட்டாண்மை முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதையும் இருவரும் ஒப்புக் கொண்டனர். 

இது தொடர்பாக, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய ஒத்த எண்ணங்கள் கொண்ட நாடுகளுடன் நாற்கர  ஆலோசனை நடத்துவது போல, பயனுள்ள ஆலோசனையை தொடர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இரு நாடுகள் இடையே தூதரக உறவின் 70ம் ஆண்டு விழா 2022ம் ஆண்டு வருவதால், இந்த நிகழ்வை தகுந்த முறையில் கொண்டாட வேண்டும் என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். 

ஆண்டு இருதரப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள, ஜப்பான் பிரதமர் திரு.சுகா  யோஷிஹைட் விரைவில் இந்திய வர வேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

*****************



(Release ID: 1703795) Visitor Counter : 182