பிரதமர் அலுவலகம்

இந்தியா- ஸ்வீடன் காணொலி உச்சி மாநாடு

प्रविष्टि तिथि: 05 MAR 2021 7:20PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியும் ஸ்வீடன் நாட்டு பிரதமர் திரு ஸ்டீபன் லாஃப்வெனும் இன்று கலந்துகொண்ட காணொலி உச்சிமாநாட்டில் இருதரப்பு உறவுகள், இதர பிராந்திய மற்றும் இரு நாடுகளின் பரஸ்பர விருப்பத்தின் பேரில் பன்முக விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

கடந்த மார்ச் 3-ஆம் தேதி ஸ்வீடன் நாட்டில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தித்துக் கொண்டார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது இந்தியா- நார்டிக் உச்சிமாநாட்டில் தாம் கலந்து கொண்டதையும், ஸ்வீடன் நாட்டின் அரசரும், மகாராணியும் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியா வந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

இந்தியா, ஸ்வீடன் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக உள்ள நெருங்கிய உறவு, இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் ஜனநாயகம், மனித உரிமை, சட்ட விதி, சமத்துவம், சுதந்திரம், நீதி உள்ளிட்ட  மாண்புகளை அடிப்படையாகக்  கொண்டு அமைந்துள்ளதாக இருநாட்டு தலைவர்களும் கோடிட்டுக் காட்டினர்.

 பல தரப்பு ஒத்துழைப்பு, விதிகளின் அடிப்படையிலான சர்வதேச நெறிமுறை, தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல், அமைதி மற்றும் பாதுகாப்பில் இரு நாடுகளின் வலுவான உறுதித்தன்மையை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். ஐக்கிய ஐரோப்பிய மற்றும் ஐக்கிய ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் கூட்டு முயற்சியின் வளர்ச்சியையும் அவர்கள்  ஏற்றுக் கொண்டனர்.

இந்தியா, ஸ்வீடன் நாடுகளுக்கிடையே விரிவுபடுத்தப்பட்ட பணிகளை இரு தலைவர்களும் ஆய்வு செய்ததோடு, 2018-ஆம் ஆண்டு பிரதமர் திரு மோடியின் ஸ்வீடன் பயணத்தின்போது உறுதி செய்யப்பட்ட கூட்டு செயல் திட்டம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான கூட்டு முயற்சியின் செயலாக்கப் பணிகளில் தங்களது திருப்தியை தெரிவித்தனர்.

இந்த கூட்டு முயற்சிகளில் பல்வேறு கருப்பொருள்களில் பன்முகத் தன்மை வாய்ந்த புதிய வழிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியில் இணையும் ஸ்வீடனின் முடிவை பிரதமர் திரு மோடி வரவேற்றார். கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பருவநிலை செயல்திட்ட மாநாட்டில் இந்தியா- ஸ்வீடன் நாடுகளுக்கு இடையேயான தொழில்துறையை மாற்றியமைப்பதற்கான தலைமைக் குழு என்ற கூட்டு முன்முயற்சியில் அதிகரித்து வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் இருநாட்டு தலைவர்களும் சுட்டிக்காட்டினார்கள்.

தடுப்பூசி வழங்கல் திட்டம், அனைத்து நாடுகளும் எளிதில் பெரும் வகையில் தடுப்பூசிகளை அவசரகால நடவடிக்கைகளாக வழங்குவது உள்ளிட்ட கொவிட்-19 நிலை குறித்தும் இருநாட்டு பிரதமர்களும் ஆலோசித்தனர்.

****************


(रिलीज़ आईडी: 1702893) आगंतुक पटल : 289
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam