உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted On: 01 MAR 2021 12:33PM by PIB Chennai

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி 28ம் தேதி 3,13,668-ஆக அதிகரித்ததாகவும், இவர்கள் 2,353 விமான  சேவைகளில் பயணம் செய்தவர்கள் என்று விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறினார்கடந்த 2020ம் ஆண்டு மே 25ம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது முதல், இது மிக அதிகளவிலான எண்ணிக்கை என அவர் கூறினார்.

2021 பிப்ரவரி 28ம் தேதி, விமான இயக்கங்களின் மொத்த எண்ணிக்கை 4699. விமான நிலையத்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 6,17,824.

கொவிட்-19 தொற்றை முன்னிட்டு உள்நாட்டு விமான சேவைகள் கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டன. இரண்டு மாதங்களுக்கு பின்பு விமானப் போக்குவரத்து கடந்தாண்டு மே 25ம் தேதி தொடங்கியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1701648

*******(Release ID: 1701648)(Release ID: 1701732) Visitor Counter : 196