உள்துறை அமைச்சகம்
கொவிட்-19 வழிகாட்டுதல்கள் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
Posted On:
26 FEB 2021 3:31PM by PIB Chennai
தற்போதுள்ள கொவிட்-19 கண்காணிப்பு, கட்டுப்பாடுக்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டது.
கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மற்றும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தாலும், தொற்றில் இருந்து முழுவதும் மீள கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டியுள்ளது.
அதற்கேற்ப, கட்டுப்பாட்டு மண்டலங்கள் தொடர்ந்து வரையறுக்கப்பட வேண்டும்; இந்த மண்டலங்களில் பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும்; பரிந்துரைக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் தீவிரமாக பின்பற்ற வேண்டும்.
ஆகையால், கடந்த 27.01.2021-ம் தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளபடி, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும்.
தொற்று பரவலை முறியடிக்கவும், தொற்றில் இருந்து மீளவும், தடுப்பூசி போடும் நடவடிக்கையை விரைவு படுத்தும்படியும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
*****************
(Release ID: 1701176)
Visitor Counter : 212
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam