சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தீவிரப்படுத்தப்பட்ட இந்திர தனுஷ் திட்டம் 3.0 தொடக்கம்: முதல் நாளில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி

Posted On: 23 FEB 2021 1:43PM by PIB Chennai

தீவிரப்படுத்தப்பட்ட இந்திர தனுஷ் 3.0 திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையை பல மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தொடங்கியுள்ளன. இதன் மூலம் கொரோனா பரவல் அதிகம் இருந்த காலத்தில், வழக்கமான தடுப்பூசிகள் போடப்படாத குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு தற்போது தடுப்பூசிகள் போடப்படுகின்றன. முதல் கட்ட பணி கடந்த 22ம் தேதி தொடங்கியது. இது 15 நாட்களுக்கு நடக்கிறது. 
இதற்கான பிரச்சாரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கடந்த 19ம் தேதி தொடங்கினார். அனைத்து குழந்தைகளுக்கும் முழு அளவிலான தடுப்பூசி கிடைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 
பல மாநிலங்களில் இந்த பிரசாரத்தை முதல்வர்கள் மற்றும் மாநில சுகாதார அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். 
நாட்டில் 29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 250 மாவட்டங்களில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. தடுப்பூசி போடும் இடங்களில் கொவிட்-19 நெறிமுறைகள் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
கடந்த 22ம் தேதி மாலை 5 மணி வரை, 29,000 குழந்தைகள் மற்றும் 5,000 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700145



(Release ID: 1700335) Visitor Counter : 411