சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

1 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது: மைல்கல் இலக்கை கடந்தது இந்தியா

प्रविष्टि तिथि: 19 FEB 2021 2:12PM by PIB Chennai

கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா இன்று புதிய மைல்கல் இலக்கை கடந்தது.

இன்று காலை 8 மணிவரை, கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்தது. இந்த இலக்கை அடைய இந்தியாவுக்கு 34 நாட்கள் ஆனது. தடுப்பூசி போடுவதில் உலகின் இரண்டாவது வேகமான நாடாக இந்தியா உள்ளது.

இன்று காலை 8 மணி வரை மொத்தம் 1,01,88,007 கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவர்களில் 62,60,242 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள். 6,10,899 பேர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள்.

33,16,866 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்களப் பணியாளர்கள்.

2வது டோஸ் தடுப்பூசி போடும் பணி பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கியது.

34 ஆம் நாளான நேற்று 6,58,674 தடுப்பூசிகள் போடப்பட்டன.

இந்தியாவில் கொவிட் 19 தடுப்பூசி போடுவதில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1.39 லட்சமாக  (1,39,542) உள்ளது.

நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை இன்று 1.06 கோடியாக (1,06,67,741) உள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை 97.30 சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில் 10,896 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

13,193 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699353

 

**


(रिलीज़ आईडी: 1699415) आगंतुक पटल : 257
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Malayalam