பிரதமர் அலுவலகம்

கேரளாவில் முக்கிய மின்சார, நகர்ப்புறத் திட்டங்களுக்கு பிரதமர் வரும் 19-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்

Posted On: 17 FEB 2021 8:57PM by PIB Chennai

கேரளாவில் வரும் 19-ம்தேதி மாலை 4.30 மணியளவில் முக்கிய மின்சார, நகர்ப்புறத் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். மாநில முதலமைச்சர், மத்திய மின்சாரத் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

புகலூர்- திருச்சூர் மின்சார விநியோகத் திட்டம்

பிரதமர் 320 கி.வா புகலூர் ( தமிழகம்) _திருச்சூர் (கேரளா) மின்சாரம் விநியோகத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இது மின்வலி ஆதார மாற்றி (விஎஸ்சி) அடிப்படையிலான உயர் அழுத்த நேரடி மின்சார (எச்விடிசி) திட்டமாகும். நவீன விஎஸ்சி தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதலாவது எச்விடிசி இணைப்பைக் கொண்டதாகும். ரூ.5070 கோடி செலவில் கட்டப்பட்ட இது, மேற்கு மண்டலத்தில் இருந்து 2000 மெ.வா மின்சாரத்தை செலுத்தும் திறன் கொண்டதாகும். கேரள மக்களின் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை இது பூர்த்தி செய்யும். இந்தத் திட்டம் மேலே செல்லும் எச்விடிசி எக்ஸ்எல்பிஇ ஒருங்கிணைப்பு கேபிள் லைன்கள் வழியாக செயல்படுத்தப்படும். மரபு சார்ந்த முறையுடன் ஒப்பிடுகையில், இதற்கு 35-40% அளவுக்கு குறைவான நிலம் போதுமானதாகும்.

காசர்கோடு சூரிய மின்சக்தி திட்டம்

50 மெ.வா காசர்கோடு சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய சூரியசக்தி  மின் இயக்கத்தின் கீழ், இது உருவாக்கப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டம்  பைவாலிகே, மீஞ்சா, சிப்பர் கிராமங்களில் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், ரூ.280 கோடி மத்திய அரசு முதலீட்டுடன் உருவாகியுள்ளது.

ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்

திருவனந்தபுரத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.94 கோடி மதிப்பில் உருவாக்கப்படவுள்ள இத்திட்டம். திருவனந்தபுரம் மாநகராட்சிக்கான ஸ்மார்ட் தீர்வுகளுக்கு வழிகோலும். அவசர காலங்களில், ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள பொது முனையமாக செயல்படும்.

ஸ்மார்ட் சாலைகள் திட்டம்

திருவனந்தபுரத்தில் ஸ்மார்ட் சாலைகள் திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்ரூ.427 கோடி செலவில் இத்திட்டம் உருவாகும். திருவனந்தபுரத்தில் தற்போது உள்ள 37 கி.மீ சாலைகளை உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் சாலைகளாக மாற்ற இது வகை செய்யும். மேல்நோக்கு  வசதிகளை தரைக்கடியில் அமைத்து, சாலை சந்திப்புகளை மேம்படுத்தும்.

அருவிக்கராவில் நீர் சுத்திகரிப்பு நிலையம்

அருவிக்கராவில் அம்ருத் திட்டத்தின் கீழ், கட்டப்பட்ட 75 எம்எல்டி ( தினசரி மில்லியன் லிட்டர்) நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். திருவனந்தபுரம் மக்களுக்கு குடிநீர் விநியோகத்தை இது ஊக்குவிக்கும். மேலும், அருவிக்கராவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் பராமரிப்புப் பணிகளின் போது, நகரத்தின் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் தடங்கல்களைத் தவிர்க்க இது உதவும்.(Release ID: 1698962) Visitor Counter : 55