பிரதமர் அலுவலகம்

ஓய்வுபெற்ற நீதிபதி எம் ராமா ஜோய்ஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 16 FEB 2021 12:34PM by PIB Chennai

ஓய்வுபெற்ற நீதிபதி எம் ராமா ஜோய்ஸ் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “ஓய்வுபெற்ற நீதிபதி திரு ராமா ஜோய்ஸ், அரும்பெரும் அறிஞராகவும், நீதிமானாகவும் திகழ்ந்தார்.  இந்தியாவின் ஜனநாயக தன்மையை வலுப்படுத்துவதற்காக அவர் ஆற்றிய அறிவார்ந்த பங்களிப்புக்காக நேசிக்கப்பட்டார்.  அவரது மறைவால் துயருற்றேன்.  இந்த சோகமான தருணத்தில், எனது எண்ணங்களால் அவரது குடும்பத்தினருக்கும், அவரது அபிமானிகளுக்கும் துணை நிற்கிறேன். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1698369) வருகையாளர் எண்ணிக்கை : 213