சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொரோனா பாதிப்பு: 33 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 5000-க்கும் குறைவானோருக்கு சிகிச்சை
Posted On:
15 FEB 2021 12:19PM by PIB Chennai
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.39 லட்சமாகக் (1,39,637) குறைந்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 1.28 சதவீதமாகும்.
தேசிய அளவைப் போலவே 33 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் 5000-க்கும் குறைவானோர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். திரிபுரா, டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹவேலியில் தற்போது தலா இரண்டு பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிப்ரவரி 15, 2021 காலை 8 மணி வரை, தமிழகத்தில் 2,47,574 பேர், புதுச்சேரியில் 6,024 பேர் உட்பட, நாடு முழுவதும் சுமார் 83 லட்சம் (82,85,295) பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
1,73,729 முகாம்களில் 59,88,113 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 24,561 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 22,72,621 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் 30-ஆம் நாளில் (பிப்ரவரி 14, 2021) 877 முகாம்களில் 21,437 பயனாளிகளுக்கு (20,504 பயனாளிகளுக்கு முதல் டோஸ், 933 பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸ்) நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,21,220 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.29 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11,649 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 4,612 பேரும், மகாராஷ்டிராவில் 4,092 பேரும், தமிழ்நாட்டில் 470 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 90 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698068
***************
(Release ID: 1698130)
Visitor Counter : 289
Read this release in:
English
,
Marathi
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Urdu
,
Bengali
,
Manipuri
,
Malayalam