பிரதமர் அலுவலகம்

மகாராஜா சுகல்தேவ் நினைவிடம் சித்துவாரா ஏரி வளர்ச்சிப் பணி ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்

Posted On: 14 FEB 2021 11:27AM by PIB Chennai

மகாராஜா சுகல்தேவ் நினைவிடத்திற்கும், சித்துவாரா ஏரி வளர்ச்சிப் பணிக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி இம்மாதம் 16-ந் தேதி அன்று (16.02.2021) காலை 11 மணியளவில் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார். மகாராஜா சுகல்தேவ்-வின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக உத்தரப்பிரதேசம் பரேச்-சில் இந்த விழா நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் திரு.யோகி ஆதித்தியநாத்தும் இதில் பங்கேற்கிறார்.

மகாராஜா சுகல்தேவ் குதிரையில் அமர்ந்திருக்கும் தோற்றத்திலான சிலையை அமைப்பதும், உணவகம், தங்கும் விடுதி, குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை உருவாக்குவதும் இத்திட்டத்தில் அடங்கும்.

மகாராஜா சுகல்தேவ்-வின் அர்ப்பணிப்பும், நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவையும் தேச மக்கள் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும். இந்த நினைவகத்தை மேம்படுத்துவதன் மூலம், மகாராஜா சுகல்தேவ்-வின் வீரம் செறிந்த வரலாற்றை மக்கள் சிறப்பாக அறிந்து கொள்ள உதவும். இந்தப் பகுதியின் சுற்றுலா வளர்ச்சிக்கும், இந்தத் திட்டங்கள் பயனுள்ளதாக அமையும்.

*****



(Release ID: 1697888) Visitor Counter : 176